நீதிமன்ற உத்தரவு

சி.ஜே.பி. (கரப்பான் பூச்சி கட்சி) இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் இந்திய குடியுரிமையாளர் தானா என்பதை உள்துறை அமைச்சகம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனுவில், மத்திய அரசு ஆறு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனு மற்றும் கோரிக்கைகள்

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு நடத்தும் விசாரணையில் சவுரவ் தாஸ் நேபாளி எனத் தெரிய வந்தால், அவருக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சமூக வலைதள குற்றச்சாட்டுகள்

மேலும், நீதித்துறை குறித்து, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும் மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவரது சமூக வலைதள கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

விசாரணை விவரம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி. ஜெகன்நாத், இது தொடர்பாக மத்திய அரசிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என தெரிவித்தார். இதையடுத்து, ஆறு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.