இந்திய மல்யுத்த வீராங்கனை மணிஷா பன்வாலா (29) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி, உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய மகளிர் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
இந்த இறுதிப்போட்டி கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்றது. மகளிர் 59 கிலோ எடைப்பிரிவில் மணிஷா, அமெரிக்காவின் அபிகெய்ல் நேட்டியை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த போட்டியில் மணிஷா 8-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தையும் உலக சாம்பியன் பட்டத்தையும் உறுதி செய்தார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பலரும் மணிஷாவின் சாதனைக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன், 2021 ஆம் ஆண்டு 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.




