வங்கக்கடலில் ‘முரசு’ புயல் உருவாகியுள்ளது. இந்தப் புயல் தற்போது தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் மையம் கொண்டுள்ளது. நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நெல்லூர் மற்றும் நர்சபூர் இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இன்றைய வானிலை (நவம்பர் 1)
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அங்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது:
- நீலகிரி
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- ராணிப்பேட்டை
- சென்னை
நாளைய வானிலை (நவம்பர் 2)
நாளை திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது:
- நீலகிரி
- வேலூர்
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
நவம்பர் 3
நாளை மறுநாள் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அங்கு மஞ்சள் அலெர்ட் தொடரும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




