ஐரோப்பிய நாடான பிரான்சில் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை அதிகரிப்பு, நாளுக்கு நாள் உயரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை எதிர்த்து மக்கள் கடந்த சில வாரங்களாக அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில பகுதிகளில் போராட்டங்கள் வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதுடன், தீ வைப்பு சம்பவங்களும் நடந்ததாக கூறப்படுகிறது.
நிலைமை நீடிப்பதால் பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்றுடன் இந்த போராட்டம் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. அரசு தரப்பில் சில சமரச நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும், போராட்டத்தை கைவிட மக்கள் மறுத்துள்ளனர்.
இதற்கிடையில் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளிலும் கல்வி, சுகாதாரம், காலநிலை பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற காரணங்களை முன்வைத்து அந்தந்த அரசுகளை எதிர்த்து போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.




