குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில் 12 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட செயற்கை ‘ரெயின் பாரஸ்ட்’ (மழைக்காடு) பகுதியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்வு, சர்தார் வல்லபாய் படேலின் 151வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்றது. மழைக்காடு பகுதியை சுற்றிப் பார்த்த பிரதமர், பின்னர் அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
தன் பதிவில், கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரின் மழைக்காட்டில் செழிப்பான பசுமையும் இயற்கையின் அழகும் இணைந்து, பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை (ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி) காணக்கிடைக்கும் கண்கவர் காட்சிகளும் இந்த அனுபவத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார்.




