தமிழகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) நடத்திய பேரணிகள் சிறு சலசலப்பு கூட இல்லாமல் நடந்து முடிந்ததாக தினமலர் செய்தி தெரிவிக்கிறது. ஆர்ப்பாட்டமோ ஆரவாரமோ இன்றி, தொடக்கம் முதல் இறுதி வரை அமைதி நிலவியதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியையொட்டியும், அமைப்பின் 100 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலும் இந்தப் பேரணிகள் திட்டமிடப்பட்டன.

உயர் நீதிமன்ற அனுமதி

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் பேரணிகளை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஊர்வலங்கள் ஒழுங்காக நடந்தது, அமைப்பால் தனது நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்த முடியும் என்பதை நிரூபித்ததாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.