முரசு புயல் ஆந்திராவின் நெல்லூர் – நரசாப்பூர் இடையே இன்று இரவு சுமார் 11.30 மணிக்குக் கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
தற்போது இந்தப் புயல் நெல்லூருக்குத் தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மின் கட்டமைப்புகள் பாதிப்பு
புயலால் ஆந்திராவின் பல மாவட்டங்களில் மின் விநியோகக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சீரமைக்க உதவுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜயிடம் கோரிக்கை விடுத்தார். முதல்வர் விஜயின் உத்தரவின் பேரில், மின் விநியோகச் சீரமைப்புப் பணிகளுக்காக 500 மின்வாரியப் பணியாளர்கள் ஆந்திராவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவும் கைகொடுப்பு
தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகாவும் ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மின் விநியோகத்தை விரைவாகச் சீரமைக்கத் தேவையான உபகரணங்களுடன் 500 அனுபவம் வாய்ந்த மின் பணியாளர்களை அனுப்பியுள்ளதாக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். “எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.




