இந்தியா தனது ஐந்தாவது மற்றும் இறுதி எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடமிருந்து 2027ம் ஆண்டு துவக்கத்தில் பெறக்கூடும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்த அமைப்பு இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்தின் பின்னணி

கடந்த 2018ம் ஆண்டு, ரூ.51,838 கோடி மதிப்பில் ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதுவரை அவற்றில் நான்கு அமைப்புகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது.

ஒப்பந்தம் நிறைவை நோக்கி

ஐந்தாவது அமைப்பு இந்தியாவை வந்தடைவதன் மூலம், 2018ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவடையும்.

கூடுதல் அமைப்புகள் குறித்து பரிசீலனை

நாட்டின் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில், கூடுதலாக ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்குவது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.