நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான பாலிவுட் படம் ராமாயணம் பாகம்-1. இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. வரும் 5ம் தேதி வெளியாகும் இப்படம், முன்பதிவில் மட்டுமே ரூ.45.96 கோடி வசூலித்துள்ளது. இந்தத் தொகை ரூ.50 கோடியை நெருங்கி வருகிறது.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராவணன் வேடத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்துள்ளார். இதனால் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவுகிறது.

இந்தியாவில் டிக்கெட் விற்பனை

இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி, இந்தியாவில் 1,708 திரையரங்குகளில் 35,697 காட்சிகளுக்கு 11.01 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதில் உண்மையில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் ரூ.36.85 கோடி வசூலாகியுள்ளது. முதல் நாள் காட்சிகளுக்கு மட்டும் ரூ.25.39 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்றுள்ளன.

நகரம், மாநிலம், மொழி வாரியாக

  • நகரங்கள்: டில்லி என்சிஆர் பகுதி ரூ.6.78 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பையில் ரூ.6.08 கோடியும், பெங்களூருவில் ரூ.5.79 கோடியும் வசூலாகியுள்ளன.
  • மாநிலங்கள்: மஹாராஷ்டிரா ரூ.9.42 கோடியுடன் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடர்ந்து கர்நாடகா ரூ.7.15 கோடி, டில்லி ரூ.6.78 கோடி, குஜராத் ரூ.3.71 கோடி, தெலுங்கானா ரூ.2.93 கோடி வசூலித்துள்ளன.
  • மொழிகள்: ஹிந்தி பதிப்பு ரூ.38.70 கோடியுடன் பெரும் பங்கு வகிக்கிறது. கன்னட பதிப்பு ரூ.4.41 கோடியும், தெலுங்கு பதிப்பு ரூ.2.35 கோடியும் வசூலித்துள்ளன. தமிழ், மலையாள பதிப்புகள் குறைந்த அளவே பங்களித்துள்ளன; மலையாள பதிப்பின் முன்பதிவு ரூ.8.01 லட்சம்.

வெளிநாடுகளில் வரவேற்பு

சர்வதேச அளவில் இப்படத்திற்கு ரூ.33.23 கோடிக்கு முன்பதிவு நடந்துள்ளது. இது படத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தைக் காட்டுகிறது.