தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் (85), புனேயில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மும்பையிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தும்மல் மற்றும் இருமலின்போது மார்பு வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரது மகள் சுப்ரியா சுலே தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தார்.

மருத்துவமனை அறிக்கை

சரத்பவாரின் உடல்நிலை விரைவில் சீராகும் என எதிர்பார்ப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மூத்த தலைவரின் உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.