அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின்படி, பெண்களின் திருமண நாளில் அண்ணன் சீராக எட்டு கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். இந்த அறிவிப்பை நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் வெளியிட்டிருந்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, தேவையான தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.