ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சம்பவம் நடந்த இடம் எல்லைப் பகுதி என்பதால், பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது ரயிலைக் கவிழ்க்கும் சதியா என்றும், இதில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சேதமடைந்த தண்டவாளப் பகுதியைச் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.




