பிரிட்டனின் கவென்ட்ரி நகரில் வசிக்கும் சீக்கியரான இந்தர்ஜித் ஜக்டிக்கும், அவரது மகள் அவதார் கவுருக்கும் நகராட்சி நிர்வாகம் ‘நல்ல குடிமகன்’ விருதை வழங்கியுள்ளது. இவர்கள் நடத்தும் ‘லங்கர் எய்ட்’ அறக்கட்டளை, 2025-ல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவுகளை வழங்கியது.
இந்த முயற்சி 2016-ல் ஒரு வேலைவாய்ப்பு மையத்தின் வெளியே, வாரத்துக்கு 30 உணவுகளுடன் தொடங்கியது. இன்று வாரம் 20,000-க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கும் அளவுக்கு இது வளர்ந்துள்ளது.
மதம், வயது, பின்னணி எதையும் பாராமல் அனைவருக்கும் உணவளிக்கும் சீக்கிய லங்கர் மரபே இந்தப் பணிக்கு உந்துதலாக உள்ளது.
கருணை, உள்ளடக்கம், சமூக உணர்வு ஆகிய கவென்ட்ரி நகரின் மதிப்புகளை தந்தையும் மகளும் பிரதிபலிப்பதாக மேயர் ரோஜர் பெய்லி பாராட்டினார்.



