கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். தவெக ஆட்சி அமைத்த பின்னர், பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.4) விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

பணி ஆணை வழங்கிய விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணி வழங்கியதில் எந்த மாற்றமும் இல்லை என அரசு தரப்பு பதிலளித்தது. நிலைப்பாடு மாறவில்லை என்றால் பதில் மனுவுக்கு ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் வினவினர்.

இறுதியில், விளக்க மனு தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.