வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த இடைக்காலத் தேர்தலில் குடியரசு கட்சி தோல்வியடைந்ததற்கு ஈரான் போரே முக்கிய காரணம் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவு குறித்துப் பேசிய வான்ஸ், கட்சியின் தோல்விக்கு ஈரான் போரே காரணம் என்று கூறினார். அதிபரும் முந்தைய நாள் இதே கருத்தைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயக கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் காட்டியதாகவும், தங்களிடம் இருந்த தரவுகளும் அதே செய்தியையே தெரிவித்ததாகவும் வான்ஸ் கூறினார். சில மாநிலங்களில் வாக்குப்பதிவு சுமாராக இருந்தது; மற்ற மாநிலங்களில் மிகச் சிறப்பாக இருந்தது; ஆனால் எந்த மாநிலத்திலும் அது பேரழிவாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2024ல் டிரம்ப் மற்றும் வான்சுக்கு வாக்களித்த பலர், 2026ல் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்ததே உண்மையான பிரச்னை என்று அவர் குறிப்பிட்டார்.




