
முதல்வர் விஜய் வழக்கு: தீர்ப்பு அக்.14க்கு ஒத்திவைப்பு
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல்வர் விஜயை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் மற்றும் திமுக வேட்பாளர் சேகர் ஆகியோர், விஜயின் வெற்றியை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரமாணப் பத்திரத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி, விசாரணை நடத்தவும் வெற்றியை ரத்து செய்யவும் அவர்கள் கோரினர். இதற்கு எதிராக, தன் மீது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி முதல்வர் விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க முடியுமா என்ற கேள்வியை நீதிபதி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.


































