
1990 கேரள அரசு பஸ் கொள்ளை: 36 ஆண்டுகளுக்குப் பின் 71 வயதில் கைது
கேரளாவில் 1990ஆம் ஆண்டு அரசு பஸ்சில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்த வழக்கில், 36 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் தற்போது 71 வயதில் கைது செய்யப்பட்டுள்ளார். மைசூருவில் கிடைத்த ஒரு திடீர் தடயமே இந்த பழைய வழக்கை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. போலீசார் கூறுகையில், திருவம்பாடி–கூம்பரா இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் திருவம்பாடி வந்தபோது ஒருவர் பஸ்சில் ஏறி, துப்பாக்கி காட்டி அன்றைய வசூல் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் குற்றத்தில் தொடர்புடையவர் ‘ஜோஸ்’ என அடையாளம் காணப்பட்டு, அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. ஆனால் பல ஆண்டுகளாக போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.


































