
உ.பி. முன்னாள் போக்குவரத்து அதிகாரியிடமிருந்து ரூ.35 கோடி சொத்துக்கள் பறிமுதல்
உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில் உதவி வட்டார போக்குவரத்து அதிகாரியாக (ARTO) பணியாற்றிய லலித் குமார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரூ.35 கோடி மதிப்புள்ள சொத்துகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லக்னோவில் உள்ள அவரது வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ரூ.1.62 கோடி ரொக்கம், 13 கிலோ தங்க நகைகள் மற்றும் 9 கிலோ வெள்ளிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் நகை/வெள்ளிப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் பல இடங்களில் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


































