
ஈரான் வம்ச நடிகையுடன் ரகசிய தொடர்பு என புத்தகம் குற்றச்சாட்டு; மேக்ரான் மீது சர்ச்சை
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீது, ஈரான் வம்சாவளி நடிகையுடன் ரகசியமாக தொடர்பில் இருந்ததாக கூறும் புதிய புத்தகக் குற்றச்சாட்டு வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் பத்திரிகையாளர் புளோரியன் டார்டிப் எழுதிய அன் அல்மோஸ்ட் பர்பெக்ட் கப்பிள் என்ற புத்தகத்தில், கடந்த ஆண்டு மே மாதத்தில் மேக்ரான் வியட்நாம் தலைநகர் ஹானோய் சென்றபோது நடந்ததாக கூறப்படும் சம்பவத்துடன் இந்த விவகாரம் இணைக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து இறங்கும் போது பிரிஜிட் மேக்ரான் அவரை கோபமாக தள்ளுவது போலத் தோன்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அப்போது அது ‘தமாஷ்’ என மேக்ரான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் புத்தகத்தின் கூற்றுப்படி, மேக்ரானின் மொபைலில் இருந்து நடிகை கோல்ஷிப்தே பராஹானிக்கு அனுப்பப்பட்ட செய்திகளை பிரிஜிட் பார்த்ததாகவும், அதனால் விமான நிலையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் அறை போன்ற நிகழ்வுகள் நடந்ததாகவும் ஆசிரியர் விவரிக்கிறார்.


































