
‘குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க’ திமுக-அதிமுக இன்னும் முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
திமுகவும் அதிமுகவும் ‘குறுக்கு வழியில்’ ஆட்சி அமைக்க இன்னும் முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக அந்தக் கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைவோர் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜ ஆதரவுடன் திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முன்பு முயன்றதாகவும், தவெக ஆட்சி அமையாமல் தடுக்கும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் நடந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் இபிஎஸ் மகன் ஆகியோர் சில தொழிலதிபர்களுடன் இணைந்து மாற்று வழியில் ஆட்சியமைக்க முயல்கிறார்கள் என அவர் கூறினார். இதுவே திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேற நினைப்பதற்கான காரணமாகவும் அவர் குறிப்பிட்டார்.

































