
தேர்தல் வெற்றி–தோல்வி சகஜம்: இளைஞர்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை
சென்னை: தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் இயல்பானது; அதை தனிப்பட்ட பிரச்சினையாக மாற்றிக் கொள்ளாமல் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் இளைஞர்களிடம் கேட்டுக் கொண்டார். நிருபர்களிடம் பேசிய அவர், தேர்தல் காலத்தில் சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள் மனவருத்தம் அளிப்பதாகவும், சிலர் தங்கள் விருப்பமான வேட்பாளர் அல்லது கட்சி வெற்றி பெறாவிட்டால் தங்களை காயப்படுத்திக் கொள்வோம் எனக் கூறும் அளவுக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் வருவதாகவும் குறிப்பிட்டார். கட்சியை விரும்புவது, மதிப்பது, கட்சிக்காக வேலை செய்வது இயல்பானதே; ஆனால் “என் கட்சி மட்டுமே வெல்ல வேண்டும், மற்றவர்கள் போட்டியிடக் கூடாது” என்ற மனநிலை ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார்.


































