
டிரம்ப் மீடியா பங்கு மதிப்பு ரூ.55,000 கோடி சரிவு; சிஇஓ மாற்றம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் மீடியா அண்டு டெக்னாலஜி குழுமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கு மதிப்பு கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி டெவின் நுன்ஸ் மாற்றப்பட்டுள்ளார். அறிக்கையின் படி, நவம்பர் 2024 முதல் தற்போது வரை நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.55,000 கோடிக்கு மேல் குறைந்துள்ளது. இது சுமார் 67% சரிவாகக் கணிக்கப்படுகிறது. இதனால் பல முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். டிரம்ப் மீடியா நிறுவனத்தின் கீழ் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளம் இயங்கி வருகிறது. 2021 அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்விக்குப் பிறகு ‘கேபிடோல்’ சம்பவத்தைத் தொடர்ந்து பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் அவரது கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், மாற்றாக இந்த தளம் தொடங்கப்பட்டது.


































