
கத்தாரில் தாக்குதல் எதிரொலி: ஐரோப்பாவில் காஸ் விலை உயர்வு
லண்டன்: கத்தாரில் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய சந்தைகளில் காஸ் விலை உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், அமெரிக்காவுக்கு பதிலடி எனக் கூறி அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை இலக்காக வைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்தையும் டிரோன் மூலம் தாக்கியதாகவும், பின்னர் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு வளைகுடா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

































