
விமான எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதியம்: அமைச்சரவை ஒப்புதல்
விமான எரிபொருள் (ஏ.டி.எப்.) விலை கடுமையாக உயர்ந்ததால் பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், ரூ.10,000 கோடி மதிப்பிலான “விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியம்” அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத் தொடரில் பாதிப்பு நீடித்து, விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தாக்கத்தில், ஏ.டி.எப். விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, மார்ச் முதல் மே வரை சுமார் இரண்டரை மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் லிட்டருக்கு ரூ.60.50 இருந்த விலை, மே மாதத்தில் சுமார் ரூ.142 ஆக உயர்ந்தது.


































