
பாபநாசத்தில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும்: 55 ஆண்டுகளாக வெற்றி இல்லை என கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டசபை தொகுதியை வரவிருக்கும் தேர்தலில் திமுகவுக்கே ஒதுக்கி, கட்சி நேரடியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக இந்த தொகுதியில் திமுக நேரடி வெற்றி பெறவில்லை என்பதே அவர்களின் முக்கிய காரணமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் பாபநாசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலிலும் அதே தொகுதியை அவர் கேட்டு வருவதாகவும், ஆனால் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்று உள்ளூர் கட்சியினர் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


































