
துபாயில் 3 நாட்கள் சிக்கிய 580 இந்தியர்கள் மீட்பு; முதல் குழு மும்பை வந்தடைந்தது
துபாயில் மூன்று நாட்களாக சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்தடைந்தனர். மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவை துண்டிக்கப்பட்டுள்ள சூழலில் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறி வைக்கலாம் என்ற அச்சத்தாலும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலவரத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவை பாதிக்கப்பட்டு, அங்குள்ள பல இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.


































