
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: கலெக்டர், கமிஷனர் மேல்முறையீடு ஒத்திவைப்பு
மதுரை கிளை விசாரணை ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை திங்களன்று ஒத்திவைத்தது. இந்த விவகாரம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் 2025 டிசம்பர் 1 அன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிலிருந்து தொடங்குகிறது. வழக்கமான இடங்களுடன் சேர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.

































