
தேர்தல்களுக்கும் எரிபொருள் விலைக்கும் தொடர்பில்லை: மத்திய அமைச்சர் பூரி
ஆமதாபாத்: எரிபொருள் விலைகள் தேர்தல்களால் பாதிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை மறுத்தார். தேர்தல்களுக்கும் எரிபொருள் விலைக்கும் “எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் செய்யவில்லை என்றும், இந்திய சமையலறைகளில் சமையல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். பீதியை கொள்கையாக மாற விடமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் காரணமாக விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று சிலர் கூறுவதை சுட்டிக்காட்டிய பூரி, கடந்த நான்கு ஆண்டுகளில் பல தேர்தல்களை நாடு சந்தித்துள்ளதாக கூறினார். எரிபொருள் விலைகளுக்கும் தேர்தல்களுக்கும் தொடர்பில்லை என்ற நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


































