
அடுத்த ஜனாதிபதி ராஜ்நாத் சிங்? உ.பி. தேர்தலுடன் இணைத்து பேசும் பா.ஜ.
லக்னோ: உத்தர பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்தில் முடிவடைவதால், மார்ச் இறுதி–ஏப்ரல் காலகட்டத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சி தலைமையிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக பேசப்பட்டாலும், அடுத்த சட்டசபை தேர்தலிலும் யோகியே முதல்வர் வேட்பாளர் என பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ். தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உ.பி. தேர்தல் விவாதம் 2027 ஜனாதிபதி தேர்தலுடனும் இணைத்து பேசப்படத் தொடங்கியுள்ளது. தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவிக்காலம் 2027 ஜூலையில் முடிவடைகிறது. உ.பி. முதல்வராகவும் மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ள, தற்போது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் பெயர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கட்சிக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.


































