
உலகின் மகிழ்ச்சியான 25 நாடுகள்: பின்லாந்து மீண்டும் முதலிடம்; இந்தியா 116வது
ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட 2026 உலக மகிழ்ச்சி தரவரிசையில், பின்லாந்து தொடர்ந்து 9வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வெளியாகும் இந்த பட்டியலில், உலகின் 147 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட காரணிகள் அடிப்படையாகக் கொண்டு மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. அதிகபட்சம் 10 புள்ளிகளில், பின்லாந்து 7.76 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்தது. இந்தியா இந்த ஆண்டு 116வது இடத்தில் உள்ளது; 2025ல் 118வது இடத்தில் இருந்த நிலையில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.


































