
தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை: துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி மார்ச் 10 அன்று காணாமல் போனார். மறுநாள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஆடைகள் களைந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததைத் தொடர்ந்து குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்த ஐந்து நாட்களைக் கடந்தும் இதுவரை கைது நடக்காததால், மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் போலீசார் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். விசாரணையை சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் மாவட்டத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.


































