
டில்லி மதுபான கொள்கை வழக்கு: சி.பி.ஐ. மீது விசாரணை நீதிமன்ற விமர்சனங்களுக்கு ஐகோர்ட் தடை
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அதன் அதிகாரிகள் குறித்து விசாரணை நீதிமன்றம் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 23 பேரை விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரிக்கும் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் 2021ல் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அந்த கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்த நிலையில், தற்போது இருவரும் ஜாமினில் வெளியே உள்ளனர்.


































