
2026-27 முதல் காலாண்டில் அந்நிய முதலீடு: ரூ.57,011 கோடி பெற்று தமிழகம் முதலிடம்
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) இந்தியாவில் அதிக அந்நிய நேரடி முதலீடு (FDI) ஈர்த்த மாநிலமாக தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காலாண்டில் தமிழகத்திற்கு ரூ.57,011 கோடி முதலீடு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,870 கோடியாக இருந்த நிலையில், இப்போது வரவு இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. மொத்த இந்திய அந்நிய முதலீட்டு வரவுகளில் சுமார் 30 சதவீதம் தமிழகத்துக்கே கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. நிதி, வங்கி, காப்பீடு, வணிகம், ஆராய்ச்சி உள்ளிட்ட சேவைத் துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. ஜப்பானின் முன்னணி நிறுவனம் MUFG மூலம் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்த பெரிய முதலீடு இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


































