
30 நாள் கெடு இருந்தும் ஓய்வூதிய மனுக்கள் நிராகரம்: விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
சென்னை: ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் மனுக்களை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் முடிக்காமல் வருவாய் துறை அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பட்டா பெயர் மாற்றம் போன்ற சேவைகளை எளிமைப்படுத்த அரசு www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் நேரடியாகவும், இ-சேவை மையங்கள் வழியாகவும் மனுக்கள் பதிவு செய்யலாம்; அவற்றில் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பல இடங்களில், 30 நாட்கள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து, கடைசியில் ‘தேவையான கூடுதல் விபரங்கள் இல்லை’ என கூறி மனுக்களை அமைதியாக நிராகரித்து விடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகிறது எனவும் கூறப்படுகிறது.

































