
துபாய் ஆட்சியாளரின் சகோதரர் ஷேக் அகமது பின் ரஷீத் காலமானார்; 10 நாள் துக்கம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் தம்பி ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம், செப்.21 அன்று 76 வயதில் காலமானார். அவரது மறைவையடுத்து துபாயில் 10 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக துபாய் முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்த ஷேக் முகமது, தம்பி பிரிந்தாலும் அவர் தங்களின் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் நிலைத்திருப்பார் என குறிப்பிட்டார். துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் உள்ளிட்ட பல தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


































