
டெல்லி வாலிபரின் ‘விஷப்பரீட்சை’ வீடியோ; பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்
டெல்லியில் ஒரு வாலிபர், முகத்தை மறைத்து பெண் போல உடையணிந்து இரவு நேரத்தில் ஸ்கூட்டரில் சுற்றி வந்ததை ‘விஷப்பரீட்சை’ எனக் கூறி வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலான விவாதத்தை உருவாக்கியுள்ளது. வீடியோவில் அவர், “இந்த முயற்சியை செய்ததே வருத்தப்படும்படி அனுபவங்கள் இருந்தன” எனக் கூறுகிறார். பலர் பேச முயன்றதாகவும், சிலர் வாகனத்தில் மோதுவது போல அருகில் வந்ததாகவும், சிலர் தொடர்ந்து வந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். கடைசி இரண்டு மணி நேரம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறும் அவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் உள்ளிட்ட பலர் அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறார். டெல்லியில் இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.


































