
சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு
சென்னையில் இன்று (மார்ச் 4) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600 ஆக விற்பனையாகிறது. கிராம் விலை ரூ.265 குறைந்து ரூ.15,200 ஆக உள்ளது. சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மார்ச் 2 அன்று ஆபரண தங்கம் கிராம் ரூ.15,660-க்கும், சவரன் ரூ.1,25,280-க்கும் விற்பனையானது; வெள்ளி கிராம் ரூ.315 ஆக இருந்தது. மார்ச் 3 அன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650 ஆகவும், சவரன் ரூ.80 சரிந்து ரூ.1,25,200 ஆகவும் இருந்தது. அதே நாள் மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.185 குறைந்து ரூ.15,465 ஆகவும், சவரன் ரூ.1,480 குறைந்து ரூ.1,23,720 ஆகவும் விற்பனையானது; வெள்ளி விலையில் மாற்றமில்லை.

































