
நடான்ஸ் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டது: அமெரிக்கா-இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரானில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இருப்பதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. யுரேனியம் செறிவூட்டலுக்காக இந்த நிலையம் பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், அணுஆயுதத் தயாரிப்புடன் தொடர்பு இருப்பதாக மேற்கத்திய நாடுகள் முன்பே கூறி வந்தன. இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளதாகவும், அந்த தாக்குதல்களில் கமேனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துக்கான (IAEA) ஈரான் தூதர் ரெசா நஜாபி, அமைதிப் பயன்பாட்டுக்கானதும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளதுமான நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக முகமையகத்திடம் கூறியுள்ளார்.


















