
ராகுல் பிரதமராக வேண்டும்; தமிழகமெங்கும் விஜய் பிரசாரம் செய்வார்: காங்கிரஸ்
காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்றும், அவரை ஆதரித்து தமிழகமெங்கும் முதல்வர் விஜய் பிரசாரம் செய்வார் என்றும் தெரிவித்தார். ராகுல், ‘இண்டி’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும், தமிழகத்தில் “மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி” சார்பிலும் பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார் என அவர் கூறினார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முன்பிருந்த ஆட்சியாளர்கள் பேசியிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் தாகூர் குறிப்பிட்டார். தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு விதித்துள்ள அபராதத் தொகையை மத்திய அரசு நினைத்தால் செலுத்த முடியும் என்றும், அதே நேரத்தில் அபராதம் விதிக்கப்பட்டதே வெளியுறவுத் துறைக்கு பெரும் தலைகுனிவாகும் என்றும் அவர் கூறினார்.


































